நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆக.25 ல் வரலெட்சுமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 01:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆக.25ல் வரலெட்சுமி பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணி முதல் காலை 10:00 மணிக்கு தாயாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆக.25ம் தேதி காலை 6:00 மணிக்கு தாயார் திருமஞ்சனமும், காலை 7:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு மகா சுதர்ஸன ஹோமம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு வரலெட்சுமி விரத திருமாங்கல்ய விளக்குபூஜை நடைபெறும். இரவு 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள்,விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.