பதிவு செய்த நாள்
21
ஆக
2023
11:08
சுந்தராபுரம்: ஈச்சனாரியிலுள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை, மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன் துவங்கியது. இதையடுத்து இறை ஆணை பெறுதல், தூய நீராக்கல், ஐந்து வகை தூய்மை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு நடந்தன. மாலை, மண் எடுத்தல், முளைப்பாவிகை இடுதல், ஆனைந்து வழிபாடு, காப்பு அணிவித்தல், திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு எழுந்தருளல், மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வி திருமஞ்சன ஆகுதி, திரவிய ஆகுதி, திருமுறை விண்ணப்பம் நடந்தன. இரவு நிறையாகுதி, பேரொளி வழிபாடு நடந்தன. இன்று இரண்டாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு உள்ளிட்டவை நடக்கின்றன.