திருப்பதியில் குறையவில்லை பக்தர்கள் கூட்டம்; ஒரே நாளில் ரூ.4.21 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 01:08
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். விடுமுறை தினத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் திருமலையில் குவிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கிய கூட்ட நெரிசல், ஞாயிற்றுக் கிழமை வரை தொடர்ந்தது. நேற்று ஒரே நாளில் ரூ.4.21 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நாளில் 79,444 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 12மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் கிடைத்தது.