சோழவந்தான்: சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கண்மாய் கரையில் குழந்தையானந்த சுவாமி ஜீவசமாதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி முதல் வாரத்தில் குருபூஜை விழா நடக்கும். இந்தாண்டு விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. காசி உள்ளிட்ட புனித தீர்த்தம் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சாதுக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.