பதிவு செய்த நாள்
10
அக்
2012
10:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசம், கலச ஸ்தாபனம், ஸ்ரீருத்ர ஆவாகனம், 64 பைரவர்களுக்கு ஆவாகனம், ஸ்ரீருத்ர ஹோமம், பைரவ ஹோமம், பூர்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பாடாகியது. கோவிலை வலம் வந்து சம்ஹாரமூர்த்தி மகாபைரவருக்கு மகா அபிஷேகம், கலச அபிஷேகம், மகா அலங்காரம், இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை, பைரவர் பூஜைகள் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிலை 64 முறை பிரதட்சனம் செய்து, 64 நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.