பெங்களூரு ராமேஸ்வரா கோவிலில் நாக பஞ்சமி விமரிசை; பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2023 01:08
பெங்களூரு; சாம்ராஜ்பேட், ராமேஸ்வரா கோவிலில் நாக பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூங்கரகம், பால் குடத்துடன் ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீராமபுரம், ஹனுமந்தபுரம், நாகம்மா கோவிலில் நாக விக்ரஹங்களுக்கு பாலாபிஷேகம் செய்து பெண்கள் வழிபட்டனர். மாநிலம் முழுதும் நேற்று நாக பஞ்சமி விமரிசையாக கொண்டாடப்பட்டது குறிபிடத்தக்கது.