குலசை., முத்தாரம்மன் கோயிலில் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 01:08
உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 60 நாள் விரதம் இருந்து காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் அக்.15ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான வரும் அக்.25ம் தேதி இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. பக்தர்கள் நேர்ச்சையாக காளி, அம்மன் சிவன், கிருஷ்ணன், முருகன் போன்ற பல்வேறு வேடங்கள் அணிவர் இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் 60 நாள், 40 நாள், 20 நாள் என விரதம் இருப்பர். நேற்று ஆக.22ம் தேதி 60 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள் காலையில் கடலில் குளித்து மாலை அணிந்து விரதம் துவங்கினர். காளி வேடம் அணிய மாலை அணிந்த பக்தர்கள் தங்களுக்கு என்று தனி குடிசை அமைத்து அதில் முத்தாரம்மன் படம் மற்றும் காளி வேடம் அணியும் பொருட்களை வைத்து 2 முறை பூஜை செய்து கடுமையாக விரதம் கடைபிடிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.