வளவிசெட்டிபட்டி சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 04:08
வடமதுரை: அய்யலுார் அருகே வளவிசெட்டிபட்டியில் ஸ்ரீ சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆக.21ல் சாந்தி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அய்யலுார் களர்பட்டி மகாகாளியம்மன் கோயில் அர்ச்சகர்கள் ரெங்கராஜ், சீனிவாசன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், சுக்காம்பட்டி ஊராட்சி தலைவர் முனியப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், வடமதுரை நகர செயலாளர் கணேசன் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.