சுந்தராபுரம்: ஈச்சனாரியிலுள்ள வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோவில் சார்பில் மதியம், 200 பேருக்கு வழக்கமான அன்னதானம் வழங்கப்பட்டது. அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தனியார் டிரஸ்ட் மூலம் ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். இருப்பினும் கூட்டம் உணவுக்காக நீண்ட நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. பக்தர்கள் கூறுகையில், ‘ சுமார், 15 ஆண்டுகட்கு பின் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்து, சாப்பிடாமல் திரும்பி சென்றனர். ஹிந்து சமய அறநிலைய துறையினர் தேவையான உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம். அனைவரும் மிகுந்த வேதனையடைந்தோம், ‘ என்றனர்.