ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுாரில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூல உற்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 5 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை 9:30 மணிக்கு யாக நிகழ்ச்சிகளுடன் தொடங்கி 12:00 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சுவாமி, அம்பாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. ராஜபாளையம், வெங்காநல்லுார் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.