திருவண்ணாமலை அருணாசலேஸ்வரை தரிசிக்க 3 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 12:08
திருவண்ணாமலை; வெளிமாநில பக்தர்கள் குவிந்ததால், அருணாசலேஸ்வரரை தரிசிக்க, 3 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், வார விடுமுறை நாளான நேற்று, கர்நாடகா, ஆந்திரா மாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொது தரிசனம் செய்ய, 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெளியூர் பக்தர்கள் வந்த வாகனங்களால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.