சந்திரயான்- 3 வெற்றிக்கு நன்றி; பவுர்ணமிக்காவு பத்ரகாளி கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 12:08
திருவனந்தபுரம்; இஸ்ரோ தலைவர் சோம்நாத், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பவுர்ணமிக்காவு பத்ரகாளி கோவிலில் நேற்று தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் ஒரு ஆராய்ச்சியாளர். நிலவை ஆய்வு செய்கிறேன். என் உள் மனதையும் ஆய்வு செய்கிறேன். அறிவியல் மற்றும் ஆன்மிகம் இரண்டையும் ஆராய்வது என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி. நான் பல கோவில்களுக்கும் செல்கிறேன்; பல நுால்களையும் படிக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் நம் இருப்பு மற்றும் நம் பயணத்தின் அர்த்தத்தைக் கண்டறிய முயற்சிக்கிறேன். இது நம் கலாசாரத்தின் ஒரு பகுதி. என் வெளி சுயத்தை அறிய அறிவியல் ஆய்வு செய்கிறேன். அக சுயத்தை அறிய கோவில்களுக்கு வருகிறேன். அறிவியலும், நம்பிக்கையும் இரு வெவ்வேறு கூறுகள், அவற்றை கலக்க வேண்டிய அவசியமில்லை. விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு, ‘சிவசக்தி’ எனப் பெயரிட்டதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.