திருப்பூர், ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு, துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செண்டுமல்லி, மல்லி மலர்களை கொண்டு அத்தப்பூக்கோலம் இட்டும், நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.