காரைக்குடி: காரைக்குடியில் உள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, செப்.4 ஆம் தேதி நடைபெறுகிறது.
காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்தது. தொடர்ந்து, தற்போது பல்வேறு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா செப்.4 ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த ஆக.30 ஆம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. ஆக.31 கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று மாலை, முதற்கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெறுகிறது. வரும் செப்.4 ஆம் தேதி காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் 9.30 க்கு மேல் விமான மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.