செந்துறை, நத்தம் அருகே 9 ஆண்டுக்குப் பின் நடந்த பிள்ளையார்நத்தம் முப்பிலி ஆண்டவர், கருப்பசாமி கோவில் குதிரை எடுப்பு திருவிழா மற்றும் அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நத்தம் அருகே பிள்ளையார்நத்தம் மலைப்பகுதியில் உள்ளது முப்பிலி ஆண்டவர், கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோவில். இக்கோயிலில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. அதன் பின் திருவிழா நடத்த முடிவு செய்த கிராம மக்கள் கருப்பசாமி, முப்பிலி ஆண்டவர், குதிரை, காளை,நாய் உள்ளிட்ட பல மண் சிலைகளை செய்து கோவிலில் நிறுவினர். தொடர்ந்து நேற்று சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கிடாய்கள் மற்றும் சேவல்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. இதில் செந்துறை, பிள்ளையார்நத்தம், குடகிபட்டி, மணக்காட்டூர், நத்தம் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.