கீழக்கரை: கீழக்கரை வடக்கு தெருவில் பழமையான தெட்சண மாடசாமி கோயில் உள்ளது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த செப். 2 அன்று முதல் காலயாக சாலை பூஜையுடன் விழா துவங்கியது. கடம் புறப்பாடு, வேதபாராயணம், எந்திரப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் புண்ணியாவாசனம், கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 10:30 மணி அளவில் கடம் புறப்பட்டு, மூலவர்கள் விநாயகர், தெட்சண மாடசாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.