பிரம்மோற்சவம் காண தயராகும் திருமலை திருப்பதி; வரும் 18ம் தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2023 04:09
திருமலை; திருப்பதியில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பிரம்மோற்சவம் வெகு விமரிசயைாக நடைபெறும். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முதல் பிரம்மோற்சவம் வரும் 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 26ம் தேதி சக்ரஸ்நானத்துடன் நிறைவு பெறுகிறது.
விழா நிகழ்ச்சி நிரல்:
17.09.2023 - ஞாயிறு - அங்குரார்ப்பணம்: இரவு 7 மணி முதல் 8 மணி வரை
18.09.2023 - திங்கள் -கொடியேற்றம் - மாலை 6.15 முதல் 6.30 வரை,பெரிய சேஷ வாகனம் - இரவு 9 மணி முதல் 11 மணி வரை
19.09.2023 - செவ்வாய் - சின்னசேஷ வாகனம் - காலை 8 மணி முதல் 10 மணி வரை.ஹம்ச வாகனம் - இரவு 7 முதல் 9 வரை.
20.09.2023 - புதன் - சிம்ம வாகனம் - காலை 8 மணி முதல் 10 மணி வரை.முத்துபந்தல் வாகனம் - இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
21.09.2023 - வியாழன் - கற்பக விருட்ச வாகனம் - காலை 8 மணி முதல் 10 மணி வரை.சர்வபூபாள வாகனம் - இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
22.09.2023 - வெள்ளி - மோகினி அவதாரம் - காலை 8 மணி முதல் 10 மணி வரை. கருட சேவை - இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
23.09.2023 - சனிக்கிழமை - ஹனுமந்த வாகனம் - காலை 8 மணி முதல் 10 மணி வரை.தங்க தேர் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை.கஜ வாகனம் - இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
24.09.2023 - ஞாயிறு - சூர்யபிரபை வாகனம் - காலை 8 மணி முதல் 10 மணி வரை. சந்திரபிரபை வாகனம் - இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
25.09.2023 - திங்கட்கிழமை - தேரோட்டம் - காலை 6.55 மணிக்கு. ஹம்ச வாகனம் - இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
26.09.2023 - செவ்வாய் - சக்ர ஸ்நானம் - காலை 6 மணி முதல் 9 மணி வரை. விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செப்டம்பர் 18ம் தேதி மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரங்களை பெருமாளுக்கு வழங்குகிறார்.