மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை கர்வம் உண்டானது. தன்னால் தான் ஆயர்களும், பசுக்கூட்டங்களும் வளமுடன் வாழ்கிறார்கள் எனக் கருதினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்தார் கிருஷ்ணர். ‘‘ இனி இந்திரனைக் கைவிட்டு, நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் கோவர்த்தன மலையை வழிபடுவோம்’’ என்றார். இதையறிந்த இந்திரன் கோபத்தில் ஏழுநாட்கள் மழை பெய்யச் செய்தான். பசுக்களையும், ஆயர்களையும் காக்க கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார் கிருஷ்ணர். கர்வம் அடங்கியதும் கிருஷ்ணருக்குப் பட்டாபிேஷகம் நடத்தி பிராயச்சித்தம் தேடினான் இந்திரன். இதனால் மன்னர் என்னும் பொருளில் ‘கோவிந்தராஜன்’ என கிருஷ்ணர் அழைக்கப்படுகிறார்.