அபூமூஸா அல்ரதி என்பவரிடம் நபிகள் நாயகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், “தர்மம் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்” என்றார். அதற்கு அபூமூஸா, “தர்மம் செய்ய பணம் தேவை. வசதியில்லாதவர்கள் என்ன செய்வது?” எனக்கேட்டார். “யாராக இருந்தாலும் உழைத்து சாப்பிட வேண்டும். தனது சம்பாத்தியத்தில் தான் அனுபவிப்பதோடு பிறருக்கும் கொடுக்க வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும். இதுவும் முடியவில்லை எனில் துன்பப்படும் மனிதருக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். இப்படி செய்தால் தேவையான நேரத்தில் இறைவனின் உதவி கிடைக்கும்’’ என்றார்.