வான மண்டலத்தில் பல கிரகங்கள் அமைத்து, அவை சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கினான் இறைவன். அவற்றிடையே ஒரு விளக்காக சூரியனையும் (அதிலிருந்து ஒளி வாங்கி) பிரகாசிக்கின்ற சந்திரனையும் படைத்தான். அவன் பாக்கியமுள்ளவன். இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அத்தாட்சியாக அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான். சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். அவை அனைத்தும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் வழி அறிந்து செல்லத்தக்க நட்சத்திரங்களை உண்டாக்கினான்.