ஒருநாள் நபிகள் நாயகத்தைக் கண்ட குரைஷி இனத்தைச் சேர்ந்த ஒருவன் அவரது தலையில் மண்ணை வாரி இறைத்தான். அவரும் அதை சகித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது மகள் பாத்திமா தலையைக் கழுவிவிட்டு அழத்தொடங்கினார். உடனே அவர், ‘‘மகளே. கவலைப்படாதே. பிறர் நம்மை துன்புறுத்தினாலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். இறைவன் உன்னுடைய தந்தையைக் காப்பாற்றுவான்’’ என ஆறுதல் கூறினார்.