‘பெற்றோரை வேதனைப்படுத்துபவன் எத்தனை தொழுகைகளில் ஈடுபட்டாலும் அவனுடைய பாவங்களை மன்னிக்க மாட்டேன்’ என்கிறான் இறைவன். “நான் நேரத்துக்கு தொழுகிறேன்; தானம் செய்கிறேன்; நன்மை செய்கிறேன்’’ எனச் சொல்பவர் கூட பெற்றோரை புறக்கணித்து விட்டு செய்யும் தொழுகையால் நன்மை அடைய முடியாது. * பெற்றோர் அநியாயம் செய்தாலும் அன்பு செலுத்துவது கட்டாயக் கடமை. * தாயை விட மனைவியை சிறந்தவளாக கருதுபவரை இறைவன் சபிக்கிறான். அவரது நற்செயலை ஏற்க மாட்டான். * உன் தந்தையின் உறவைப் பாதுகாத்துக் கொள். இல்லாவிட்டால் உன்னுள் இருக்கும் ஒளியை இறைவன் போக்குவான். * பெற்றோருக்கு உதவிகள் செய்தால் நலமுடன் வாழலாம்.