ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பொறுப்புடன் பணிகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மறுமை நாளில் அவரவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாவர். மக்களின் தலைவரே ஒரு நாட்டின் பொறுப்பாளர். குடிமக்கள் குறித்து அவரிடம் விசாரணை நடக்கும். பணியாளன் என்பவன் எஜமானரின் செல்வத்திற்கு பொறுப்பாளர். அவரும் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார். ஆக ஒவ்வொருவரும் அவரவர் கடமைக்கு பொறுப்பாளர்களே’’ என்கிறார் நாயகம்.