தத்துவஞானியான சாக்ரடீஸ் செருப்பு அணிய மாட்டார். ஒரு நாள் புதிதாக திறந்திருந்த செருப்புக் கடைக்கு சென்றார். அன்று முதல் கடைக்கு செல்வதும் பார்ப்பதும் என வழக்கத்தை கொண்டு இருந்தார். ஒரு முறை அவரை ப்பார்த்து கடைக்காரர் செருப்பு வாங்கவில்லையா எனக் கேட்டார். எந்த ஒரு பொருளையும் வாங்காமல் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன் என்றார் சாக்ரடீஸ். அதைக்கேட்ட கடைக்காரர் ஆச்சரியப்பட்டார். இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ்வதே சிறந்தது.