‘புரிந்து கொள்ளுங்க புதையல் எடுங்க’ என வாசகத்துடன் சிலை ஒன்று காட்டில் இருந்தது. பலரும் முயற்சித்தும் ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞனான மைக்கேல் அதைப் படித்து சிலையை உற்று நோக்கினான். அந்த சிலையின் ஆள்காட்டி விரல் எதையே சுட்டிக்காட்டுவது போல அவனுக்கு தோன்றியது. அதன் நிழல் விழும் இடத்தில் தோண்ட பொற்காசுகள் நிறைந்த குடம் ஒன்று கிடைத்தது. புத்தியுள்ளவன் சாமர்த்தியசாலி என்னும் பைபிள் வசனம் நினைவுக்கு வந்தது.