பார்ப்பவர் வியக்கும்படியாக இணை பிரியாமல் இருந்தன இரண்டு குதிரைகள். காரணம் இதில் ஒரு குதிரைக்கு கண் தெரியாது. அது இன்னொரு குதிரையின் கழுத்து மணிச் சத்தத்தை வைத்து அது செல்லும் இடங்களுக்கு மற்றொரு குதிரை பின் தொடரும். முன்னால் செல்லும் குதிரையும் தன் நண்பன் வருகிறானா என அடிக்கடி திரும்பி பார்க்கும். பார்வையற்ற குதிரை வர தாமதமானால் நின்று அழைத்துச் செல்லும். பார்வையற்ற குதிரையைப் போல நாம் குறைவுள்ளவர்களாக இருந்த போதும் ஆண்டவர் நம்மை நிராகரிப்பதில்லை. மணியோசை மூலம் வழி காட்டுவது போல அவரது வார்த்தைகளைக் கொண்டு வழிநடத்துகிறார்.