செப் 3 சனாதன தர்ம தினம்: அமெரிக்காவின் கென்டக்கி மாகாண மேயர் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2023 02:09
அமெரிக்கா: அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே நகர மேயர் செப்டம்பர் 3ம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என, தமிழக அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே நகர மேயர் செப்டம்பர் 3 ம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளார்.
லூயிஸ்வில்லே, கென்டக்கி இந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் போது மேயர் கிரேக் கிரீன்பெர்க் சார்பாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் அதிகாரப்பூர்வ பிரகடனம் ஒன்றை வாசித்தார். அதில் செப்டம்பர் 3ம் தேதி சனாதன தர்ம தினமாக கொண்டாடப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சித்தானந்த சரஸ்வதி, பர்மார்த் நிகேதன் தலைவர் ரிஷிகேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பகவதி சரஸ்வதி, துணை நிலை ஆளுநர் ஜாக்குலின் கோல்மன், துணை முதல்வர் கெய்ஷா டோர்சி மற்றும் ஏராளமான ஆன்மிக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.