திருப்புல்லாணி அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2023 03:09
திருப்புல்லாணி: திருப்புல்லாணி வடக்கு தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் கடந்த ஆக.,27ம் தேதி முளைப்பாரி விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று புல்லாணி மாரியம்மனுக்கு சர்வ மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் சக்தி கரகம் முன்னே செல்ல, பாரி சுமந்தபடி பெண்கள் வந்தனர். இன்று திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
* திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசை காந்தாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. மூலவர் காந்தாரியம்மன், குத்துக்கல் முனீஸ்வரர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று இரவு அக்னி சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். இன்று காலை பால்குடம், மாவிளக்கு, கூட்டு பொங்கல் வைத்த பின், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
* திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொத்திவலசை முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சர்வ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.