திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2023 05:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று உறியடி விழா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள், சந்தான கோபால கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சன்னதி வீதிகளில் உறியடி மண்டபத்தில், உறியடி விழா நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதி உலா, 11:00 மணிக்கு மூலவர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் மற்றும் உற்சவர் ராஜகோபாலன் சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமறை நடந்தது. விழாவில் வேணுகோபாலன் சிறப்பு அலங்காரத்தில், வானவேடிக்கையுடன் வீதி உலா வந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் செய்திருந்தார்.