ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் செப்., 18ல் ஹிந்து முன்னணி சார்பில் 25 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. செப்., 18ல் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ராமேஸ்வரத்தில் திட்டக்குடி, வேர்க்கோடு, இந்திரா நகர், எம்.ஆர்.டி., நகர் உள்ளிட்ட 25 தெருக்களில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான விநாயகர் சிலைகள் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள ஹிந்து முன்னணி அலுவலகத்தில் வந்திறங்கியது. இச்சிலைகள் காகித கூழ், மரத்தூள் கலந்த கலவையில் உருவாக்கி உள்ளனர். செப்., 18ல் சிலைகள் பிரதிஷ்டை செய்து சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. செப்., 19ல் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட உள்ளது என ராமநாதபுரம் மாவட்டம் ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.