முத்துமாரியம்மன் கோவில் திருவிழா; அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2023 05:09
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 22ல் தீர்த்தம் அழைத்து வந்து, காப்புக் கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் முளைப்பாரியுடன் அம்மன் கோவிலுக்கு வருதல், அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, அக்கினிசட்டி, பால்குடம், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று வானவேடிக்கை, முளைப்பாறியுடன் அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.