திருச்செந்துார் கோயிலில் ஆவணித் திருவிழா குடவருவாயில் தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2023 03:09
திருச்செந்துார் : திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று, சுவாமி பெரிய வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, குடவருவாயில் தீபாராதனை இன்று (8ம் தேதி) இரவு நடக்கிறது. தி
ருச்செந்துார், சுப்பிர மணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 4ம் நாளான நேற்று சுவாமி குமர விடங்க பெருமான் பெரிய வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, உள்மாட வீதிகள் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். இன்று, ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில், இரவு 7:29 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியின் போது, மேலக்கோயிலில் குமர விடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். அதே நேரத்தில், பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள, எதிர் சேவையாக இருபுறமும் தீபாராதனை நடக்கிறது.
தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 13ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 6:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் தேரோட்டம் துவங்குகிறது.