பழநி: பழநிகோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு, திருச்சியைச் சேர்ந்த பக்தர்கள் 400 லிட்டர் பால் அபிஷேகம் செய்தனர். திருச்சி உறையூர் ததீஸ் மகரிஷி மகாசபைச் சேர்ந்த பக்தர்கள் பழநி தண்டாயுத பாணி சுவாமிக்கு 400 லிட்டர் பால் அபிஷேகம் செய்தனர்.551 இளநீர்கள் கொண்டும், ஐந்து கிலோ நெய், போன்ற சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ""திருச்சியில் இருந்து திருச்செந்தூர் சென்றோம். 1500பேருக்கு அன்னதானம் செய்தோம். பழநியில் 1500 பேருக்கு அன்னதானம் செய்தோம், என்றனர்.