சுப்புலாபுரம் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி கொலு பூஜை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2012 10:10
திருவேங்கடம்: சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் துர்க்கா ஹோம நவராத்திரி கொலு பூஜை வரும் 15ம் தேதி துவங்குகிறது. ஈஸ்வரனுக்கு சிவராத்திரி எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் ஈஸ்வரிக்கு நவராத்திரி. ஸர்வலோக ஜன ஜீவரட்சகி ஆதிபராசக்திக்கு மிகவும் உகந்த இந்த நவராத்திரி தினங்களில் பெண்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் விரதமிருந்து அன்னையை நினைத்து இப்பூஜையில் கலந்து கொண்டால் குண, ரோக, சத்ரு என்று சொல்லப்படும் நோய், கடன், பகை ஆகிய துன்பங்களிலிருந்து அன்னையால் காப்பாற்றப்படுவார்கள் என்பது யுகதர்மம் வேதவிதி. இதன் அடிப்படையில் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை 10 நாட்கள் துர்க்கா ஹோம நவராத்திரி கொலு பூஜை நடக்கிறது. உடையநாயகி அம்மன் கோயில் மண்டபத்தில் தினமும் மாலை 6 மணி முதல் கணபதி ஹோமம், துர்க்கா ஹோமம், கொலு பூஜை ஆகியன நடக்கிறது. ஹோம பூஜைகளை சிவகாசி கணேசஅய்யர் நடத்துகிறார். ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயில் நிர்வாகி சுப்பையா, திருப்பணிக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் இந்து செங்குந்தர் பொதுமக்கள் செய்துள்ளனர்.