அழகுவள்ளி அம்மன் கோயில் பொங்கல் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2023 11:09
கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தின் அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா முன்னிட்டு செப்.3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், அக்கினி சட்டி, பால்குடம் எடுத்து கரும்பாலை தொட்டி, சிலா குத்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலில் முன்பு பூக்குழி இறங்கினர். அழகுவள்ளி அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 21 அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமமக்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடம், சாக்குவேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய விதியில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கட்டு திண்ணையில் இருந்து கிராமமக்கள் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக வந்து ஊரணியில் கரைத்தனர். விழாவில் கமுதி, முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.