ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2023 12:09
ஏரல்: ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா கோலாகலமாக நடந்தது. ஏரல் 9 தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டசவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், 11 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு அம்பாளுக்கு மகாபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, 2.45 மணிக்கு அம்பாள் கேடய சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், மாலை6.30 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து மேள வாத்தியங்களுடன் புறப்பட்டு வருதல், இரவு 10:30 மணிக்கு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் இருந்து மேள வாத்தியங்களுடன் அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அம்பாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சகல மேள வாத்தியங்களுடன் கரகாட்டம், வாணவேடிக்கையுடன் நகர் வீதி வலம்வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று காலை6:00 மணி மற்றும்பகல் 12 மணிக்கு அம்பாளுக்கு தீபஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சென்னை வாழ் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கத்தின் சார்பில் இன்னிசைகச்சேரி நடந்தது. விழாவில் இன்று(14ம்தேதி) இரவு ஏழு மணிக்கு மும்பைவாழ் ஏரல் அருள்மிகு சவுக்கைமுத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கத்தின் சார்பில் திரைப்படமெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு கருத்து பட்டிமன்றம் நடக்கிறது. 16ஆம்தேதி இரவு கோவை வாழ் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறைநாடார் சங்கத்தின் சார்பில் சூப்பர் சிங்கர் கலைஞர்களின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் குமரேசன் நாடார் தலைமையில் உறவின் முறை மக்கள் செய்துள்ளனர்.