சனாதனமே பாரத நாட்டின் தேசிய மதம்; இந்தூரில் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2023 12:09
இந்தூர்: ``சனாதனமே நாட்டின் தேசிய மதம்" என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தூர் கோவிலில் நடைபெற்ற கொடிமரம் திறப்பு விழாவில் கூறினார்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள மத்திய, மாநில அமைச்சர்கள், முதல்வர்கள், தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ``சனாதனமே நாட்டின் தேசிய மதம்" என்று இந்தூர் கோவிலில் நடைபெற்ற கொடிமரம் திறப்பு விழாவில் கூறினார். சனாதன தர்மம் என்பது பாரதத்தின் ராஷ்ட்ரிய தர்மம் [தேசிய மதம்]. அதன் நிரந்தரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று உ.பி. இந்தூரில் உள்ள நாத் கோவிலில் துவஜஸ்தம்பம் (கொடிமரம்) திறப்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.மேலும் இன்றும் பாரதத்தில் வாழும் பலர் சனாதன தர்மத்தை அவமானப்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும், பண்டைய காலங்களிலிருந்து நாடு பாரதம் என்று அழைக்கப்பட்டு வருகிறது, மேலும் அதன் குடிமக்கள் "இந்துக்கள்" என்று அழைக்கப்பட்டனர் என்றும் ஆதித்யநாத் கூறினார். சமீபத்தில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், தனது இந்து அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்தியதற்காக ஆதித்யநாத் அவரை பாராட்டினார்.