திருப்பதி கோயிலுக்கு பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மூன்று ஆம்புலன்ஸ்கள் நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2023 04:09
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலுக்கு பாரத ஸ்டேட் வங்கி அமராவதி வட்டத்தின் தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீ நவீன் சந்திர ஜா வெள்ளிக்கிழமை ரூ.93 லட்சம் மதிப்பிலான மூன்று ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கினார். முன்னதாக ஸ்ரீவாரி கோயில் முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அதிகாரி ஏ.வி.தர்ம ரெட்டியிடம் வாகன சாவி ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்பிஐ டிஜிஎம் ஸ்ரீ வரதராஜுலு, ஆர்எம் ஸ்ரீ சத்யநாராயணா, ஸ்ரீவாரி கோயில் பேஷ்கர் ஸ்ரீ ஸ்ரீஹரி, போக்குவரத்து டிஐ ஸ்ரீ ஜானகிராமி ரெட்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.