விரதம் இருந்து வந்த கிறிஸ்தவ பாதிரியார் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2023 01:09
சபரிமலை: மாலை அணிந்து விரதம் இருந்த கிறிஸ்தவ பாதிரியார் மனோஜ் நேற்று சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாலராமபுரத்தை அடுத்த பயற்று விளையைச் சேர்ந்தவர் பாதிரியார் மனோஜ். ஆங்கிலிக்கன் சபையின் பாதிரியாரான மனோஜ் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இதனால் அவருக்கு வழங்கிய பாதிரியார் லைசென்ஸ் உள்ளிட்ட வைகளை கன்சபை ரத்து செய்தது. இதையடுத்து அடையாள தனது ஆங்கிலிக்அட்டை உள்ளிட்டவைகளையும் திரும்ப அளித்துள்ளார் மனோஜ். கழுத்தில் சிலுவையும், ஐயப்பன் கோவிலுக்கு செல்வ தற்கான துளசி மாலையும் ஒருங்கே அணிந்து, கறுப்பு உடை அணிந்து விரதம் இருந்த மனோஜ் தமிழகத்திலும் கவனம் ஈர்த்தார்.இந்தநிலையில் பாதிரியார் மனோஜ் நேற்று சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் இருமுடிகட்டி பக்தர்களுடன் பயணித்தார். இது குறித்து மனோஜ் கூறியதாவது: அனைத்து சமயங்களையும் குறித்து அறிந்து கொள்ளும் ஆசையில் அதுகுறித்து தொடர்ந்து படித்து வருகிறேன். இந்து சமயம் பற்றி அறிந்து கொள்வதற்காக நான் சபரிமலை கோவிலுக்கு வந்துள்ளேன். அனைத்து மதத்தினரும் செல்ல அனுமதி உள்ள ஒரு கோவில்தான் சபரி மலை. அதற்கான ஆசார, அனுஷ்டானங் களை ஏற்றுக்கொண்டு கோவிலுக்குச் சென்று நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் சுவாமி தரி சனம் செய்தேன். அனைத்து மதங்க ளிலும் இறைவனைப் பற்றி பல விதமாக கூறப் பட்டாலும் கடவுள் ஒருவர்தான். ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் சைதன்ய மும், என்னில் உள்ள ஜீவ சைதன்யமும், கிறிஸ்துவில் உள்ள ஜீவ சைதன்யமும், சுவாமி விவேகானந்தரின் ஜீவ சைதன்யமும் ஒன்று தான் என குறிக்கும் விதமாக தத்வமஸி சபரிமலையில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது. நான் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியில் இருந்து நான் விரதம் இருந்து வருகி றேன். இந்த மாதம் 5ம் தேதி திருமலை மகாதே வர் கோவிலில் ஐயப்ப மாலை அணிந்து கொண்டேன். இந்து சமயம் குறித்தும் இஸ் லாம் மதம் குறித்தும் நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். அனைத்து மதங்க ளின் சாராம்சமும் ஒன்று தான் என்பதை மக்க ளுக்கு சொல்வதற்காக நான் கற்றுக் கொண்டி ருக்கிறேன். அனைத்து மதங்களும் ஆராதிக்கும் இறைவன் ஒருவர்தான். நமக்குள் மத பிரிவினை வேண்டாம். கடவுள் மனிதனை எப்படி ஒன் றாக பார்க்கிறாரோ அது போன்று மனிதரும் அனைத்து மத கடவுளையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பதை நான் மக்களுக்கு எடுத் துச்சொல்ல விரும்புகி றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.