பதிவு செய்த நாள்
21
செப்
2023
03:09
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு, 3,000 ரூபாயாக இருந்த ஓய்வூதியம், 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம், 1,500 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தைத் துவக்கி வைப்பதன் அடையாளமாக, நேற்று தலைமைச் செயலகத்தில், ஐந்து கோவில் பணியாளர்கள் மற்றும் ஐந்து குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்திற்கான காசோலைகளை, முதல்வர் வழங்கினார்.