திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை, கரடி; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2023 01:09
திருப்பதி: திருப்பதி; திருப்பதி, திருமலை அலிபிரி நடைபாதையில் சிறுத்தையை அடுத்து கரடி உலா வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த பக்தர் குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய, திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்ற போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி இறந்தார். இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இதில் கூண்டில் நேற்று 6வது சிறுத்தை சிக்கியது. இதை தொடர்ந்து, அலிபிரி நடைபாதையில் 7வது மைலில் கரடி ஒன்று நடமாடியது. இதைப் பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் பக்தர்களிடையே, அதிர்ச்சி மற்றும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் பேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.