வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா; ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் அறிவுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2023 06:09
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு தேரோடும் வீதிகள் மற்றும் பஜார் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
முத்தாலம்மன் கோவில் தேர்த்திருவிழா அக்..11ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இதன்படி தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடைகள், மரக்கிளைகளை அகற்றவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரில் பூசாரி உட்பட நான்கு பேர் மட்டுமே ஏற வேண்டும். தேர் வீதியில் செல்லும்போது தீயணைப்பு மீட்புத்துறை, 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல வேண்டும். தேர்ச்செல்லும் வீதிகளில் வெடிகள் வெடிக்க கூடாது உட்பட பல்வேறு அறிவுரைகளை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.