சாணார்பட்டி,சாணார்பட்டி வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமையையொட்டி ஆரத்தி பூஜை, அன்னதானம், சப்பர பவனி நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை நடந்த ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்களது கைகளாலே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து, செந்தாமரம் வீசி பூஜை செய்தனர். பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்காரம் செய்து, மதியம் நெய் தீபம் ஏற்றி, ஆரத்தி பூஜை நடந்தது. மாலையில் சப்பரபவனி நடந்தது.