திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2023 06:09
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோக பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று காலை 11:00 மணிக்கு மூலவர் யோக நிலையிலுள்ள பைரவருக்கு பூஜைகள் துவங்கியது. சதாசிவம் குருக்கள், பாபு குருக்கள் பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து 16 விதமான திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அலங்காரத் தீபாரானையில் சுவாமி தரிசனம் நடந்தது.