பாலக்காட்டில் மூன்று நாட்களாக நடந்து வந்த உலகளாவிய பிராமண சங்கமம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2023 10:09
பாலக்காடு: பிராமண இளைஞர்கள் தொழில் முனைவோராக வேண்டும் என பாலக்காட்டில் நடந்து முடிந்த பிராமண சங்கமம் நிகழ்வில் டி.வி.எஸ்., கேபிடல் பண்ட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் சீனிவாசன் பேசினார்.
கேரள மாநிலம் பாலக்காடு ராமநாதபுரம் அருகே உள்ள கலையரங்கில் கேரள பிராமண சபையின் சார்பில் நடக்கும் உலகளாவிய பிராமண சங்கத்தின் நிறைவு நாள் நிகழ்வு நேற்று நடந்தது. தொழில் முனைவு மற்றும் துவக்கம் என்ற தலைப்பில் சிறப்பு அமர்வு நடந்தது. அதில் டி.வி.எஸ்., கேபிடல் பண்ட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் சீனிவாசன் பேசியதாவது: பிராமண இளைஞர்கள் தொழில்முனைவோராக வேண்டும். அதிக அறிவு உள்ள நமக்கு ஸ்டார்ட் அப் தொடங்குவது எளிது. ஆனால் மட்டுமே சமுதாயத்திற்கு நல்லது செய்ய முடியும். நிதி உதவி அளிக்க ஏராளமானோர் நம்மிடம் உள்ளன. அதனால் இழப்பு நிகழ்ந்திடுமோ என்ற அச்சத்தை கைவிட்டு வாலிபர்கள் தொழில் முனைவோராக வேண்டும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த அமர்வில் கலந்து கொண்ட யு.எ.இ.,யில் செயல்படும் பிடெலிஸ் வேல்டு (Fidelis World) தனியார் பங்கு நிறுவன நிறுவனர் ஆனந்த் எஸ். கிருஷ்ணன் பேசியதாவது: வெளிநாடுகளில் வளர்ச்சியை குறித்து கூறுவதே தவிர்த்து நம் நாட்டின் வளர்ச்சியை குறித்து உலகெங்கும் கூறி பெருமிதம் கொள்ளுங்கள். செயல்படும் நிறுவனத்தின் பலன் அதன் பணியாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து. தொழில்நுட்பம் நம் கையில் உள்ளன. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நாம் அறிய வேண்டும். நாட்டின் கழிவுகளை வணிக ரீதியில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தினால் சமூகத்துக்கும் நமக்கும் ஒரு போல் நன்மை தரும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, காலை 9.30 மணியளவில் நடந்த ஆசைகள் மற்றும் தேவைகள் குறித்த மார்க்கோ சிந்தனை என்ற தலைப்பில் நடந்த அமர்வில் பட்டய கணக்காளர் (charatered Account) ஆதித்யா சேஷ், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் முத்துசாமி ஆகியோர் விவாதித்தனார். மதியம் 12 மணிக்கு சந்திப்பின் கருத்துரை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதிப்பாய்வு மற்றும் பிராமண உலக சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை, டி.வி.எஸ்., கேபிடல் பண்ட்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் சீனிவாசன் துவக்கி வைத்தார். கேரளா பிராமண சபை தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சாய் தீபக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் கேரள பிராமண சபை மாவட்ட தலைவர் கணேசன், துபாய் பெட்ரோபேக் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுந்தர் கல்யாணம், துபாய் சாந்தி இன்டர்நேஷனல் எல்.எல்.சி., சி.இ.ஓ., கிருஷ்ணகுமார், சபையின் பொருளாளர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.