பதிவு செய்த நாள்
24
செப்
2023
10:09
நியூஜெர்சி: நவீன உலகின் மிகப்பெரிய இரண்டாவது இந்து கோவில் நியூஜெர்சியில் அடுத்த இரண்டு வாரங்களில் திறக்கப்பட உள்ளது.
இது குறித்து போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா-வைச் சேர்ந்த அக்ஷர்வத்சல்தாஸ் என்பவர் கூறி இருப்பதாவது:
நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில் அக்டோபர் 8 ஆம் தேதி நியூ ஜெர்சியில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இருந்து 60 மைல்கள் தெற்கேயும், வாஷிங்டன் டிசிக்கு 180 மைல் வடக்கேயும் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரையில் சுமார் 12 ஆண்டுகளாக அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12,500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் கட்டப்பட்டு உள்ளது.
183 ஏக்கரில் பரந்த விரிந்துள்ள இந்த கோவில் பணடைய இந்து வேதங்களின் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கோவில் முழுவதும் 10 ஆயிரம் சிலைகள் மறறும் இந்திய இசை கருவிகள் மற்றும் நடன வடிவங்கள் செதுக்கப்பட்டு இந்தய கலாச்சாரத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி கொண்டுள்ளது.
கோவிலில் ஒரு முக்கிய கோவில், 12 துணை கோவில்கள், ஒன்பது ஷிகர்கள்(கோபுரங்கள்) மற்றும் ஒன்பது பிரமிடுஷிகர்களை கொண்டுள்ளது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் வகையில் மிக பெரிய நீள்வட்ட குவிமாடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கட்டுமானத்தில் நான்கு வகையான கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரானைட் உள்ளிட்ட இரண்டு மில்லியன் கன அடி கல் பயன்படுத்தப்பட்டது .பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல்,கிரீஸ், துருக்கி, இத்தாலியில் இருந்து பளிங்கு; இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட்; இந்தியாவில் இருந்து மணற்கல் மற்றும் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிற அலங்கார கற்கள். பயன்படுத்தப்பட்டு உள்ளது.இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து நீரைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா முழுவதிலும் இருந்து தன்னார்வலர்கள் அக்ஷர்தாம் கூட்டத்திற்கு உதவினார்கள். இந்தியாவிலிருந்து வந்த கைவினைஞர் தன்னார்வலர்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். 18 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாணவர்கள் முதல் நிறுவனங்களின் சிஇ.ஓ.,க்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் வரை உள்ளனர். அவர்களில் பலர் பல மாதங்களாக தங்களின் வேலையில் இருந்து விடுப்பு எடுத்து கோயில் கட்டுவதில் தங்கள் சேவைகளை வழங்கி உள்ளனர்.
அக்ஷர்தாம் அக்டோபர் 8 ஆம் தேதி BAPS ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக திறக்கப்படும். இது அக்டோபர் 18 முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில் வளாகம், உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலாகும், இது 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக உள்ளது. நவம்பர் 2005 இல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட புது தில்லி அக்ஷர்தாம் கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.