பதிவு செய்த நாள்
29
செப்
2023
10:09
மும்பை: மகாராஷ்டிராவில், பத்து நாட்கள் கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்தி திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. மும்பை உட்பட, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், பிரமாண்ட விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
இந்துக்களின், முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிராவில், பத்து நாட்கள் திருவிழாவாக, கொண்டாடப்படுகிறது. மும்பையின், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த, பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உட்பட, இரண்டு லட்சத்திற்கும் மேலான சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அரபிக் கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக, கிர்காம், ஜூஹு கடற்கரைகளில், சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊர்வலத்தின் போது, ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடியதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, மாநில போலீஸ் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூட்டம் கண்காணிக்கப்பட்டது. பிரமாண்ட விநாயகர் சிலைகள் சிறப்பு வழிபாடிற்கு பின் அரபிக்கடலில் கரைக்கப்பட்டது.