மத்திய திருப்பதி எனப்படும் பஞ்சவடீ கோயிலில் புரட்டாசி சனி விழா; நாளை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2023 06:09
பஞ்சவடீ : பஞ்சவடீ பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி கோயிலில் ஸ்ரீவாரி ஸ்ரீ வேங்கடாஜலபதி ஸ்வாமி திருமலை திருப்பதியில் நடப்பது போலவே செய்யப்படும் சகல சேவைகளையும் ஏற்று வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் அனுகிரகித்து வருகிறார். இதற்க்கு மேலும் சிறப்பு செய்யும் வகையில் ஸ்ரீ வாரி ஸ்ரீ வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமைதோறும் காலையில் ஸ்வர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனை போன்ற சிறப்பு பூஜைகள் லோக ஷேமத்திற்காக ஸ்ரீ பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் மூலம் செய்யப்படுகின்றன. இங்கு புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையான நாளை 30ம் தேதி சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் நடைபெற உள்ளது. தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மஹா சிறப்பு அன்னதான விருந்து, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மஹா சிறப்பு அன்னதானம் காலை 11:00 மணி முதல் பகல் 2.00 மணிவரை நடைபெறும் என பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் அறங்காவலர் திரு M. கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.