காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் அரசு மருத்துவமனையில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 10:10
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு சிவன் கோயில் சார்பில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை காளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு இன்று தொடங்கி வைத்தார்.
காளஹஸ்தி அரசு மருத்துவமனை தொகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகள் வசதி கொண்ட பெரிய மருத்துவமனை என்பதால் தொகுதியில் இருந்து காளஹஸ்தி தொகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருவது வழக்கம் இவர்களுக்கு துணையாக வரும் உதவியாளர்களுக்கு உணவு மருத்துவமனை அருகில் வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில் மேலும் காளஹஸ்தி அரசு மருத்துவமனை நகரின் எல்லைப் பகுதியில் இருப்பதால் அங்கு நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களுக்கு உணவு கிடைக்க சிரமமாக இருப்பதை கவனத்தில் கொண்டு காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் இன்று முதல் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கினர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நித்திய அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் தினந்தோறும் கோயிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தும் காணிக்கைகள் மூலமும் கோயிலில் நடக்கும் பல்வேறு ஆர்ஜித சேவைகள் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் வருவதால் கோயில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து வரும் நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு அன்னதானம் வழங்குவது பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.