பதிவு செய்த நாள்
05
அக்
2023
02:10
தி.நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலில் அடுத்த ஆண்டிற்கான திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டர், டைரி விற்பனையை, டி.டி.டி., தமிழக ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் துவக்கி வைத்தார்.
சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு தரிசனம் முடித்து வரும் பக்தர்கள் திருப்பதி லட்டு தினசரி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஆண்டுதோறும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் காலண்டர், டைரியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆண்டிற்கான காலண்டர், டைரி விற்பனையை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர், பெருமாள், பத்மாவதி தாயார் கோவிலில் வெளியிட்டு, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமான லட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, காலண்டர், டைரி ஆகியவை ஆண்டுதோறும் சென்னை மக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, அடுத்த ஆண்டிற்கான, 12 பக்கம், ஒரு பக்க காலண்டர், டைரி விற்பனை இன்று முதல் தி.நகர், வெங்கட்ரமணா சாலையில் உள்ள பெருமாள் கோவிலிலும், ஜி.என்., செட்டி சாலையில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலிலும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, 3.5 கோடி ரூபாய்க்கு காலண்டர், டைரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.